உலகில் உருவான முதல் பல்கலைக்கழகம்

தோரணமலை தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. மூலிகைகள், சுவைமிகு நீரை அள்ளித்தரும் சுனைகள், குகை நிழல்கள் என இந்த மலை பல்வேறு சிறப்புகளை பெற்று விளங்குகிறது. இதனால் இந்த மலையை சித்த ஆராய்ச்சிக்காக அகத்தியர் தேர்ந்து எடுத்தார். மேலும் சித்தர்களுக்கு பல்வேறு பாடங்களை கற்றுக் கொடுக்க பாடசாலைகளையும் இங்கேதான் அமைத்துள்ளார்.
சித்தர்கள் தெய்வ வழிபாட்டை முன்னிருத்திதான் எந்த ஒரு செயலையும் தொடங்குவார்கள்.

அந்த வகையில் அகத்தியரும் அவரது சீடருமான தேரையரும் தங்கள் வழிபாட்டுக்கு அமைத்ததுதான் இங்குள்ள முருகன் நிலை.
காலங்கள் கடந்தன. யுகங்கள் தோன்றி மறைந்தன. அதனால் இந்த இடத்தில் சித்தர் ஆராய்ச்சிக்கூடம் இருந்தது என்பதற்கான நினைவும் மக்கள் மனதில் இருந்து மறந்துபோனது. எப்படியோ குகைக்குள் வைத்து வழிபட்ட முருகன் சிலையும் காணாமல் போனது.
அப்புதமான இந்த மலை ஆடு, மாடு மேயும் காடாக மாறியது. இங்குள்ள சுனைகள் அவைகளின் தாகத்தை போக்கியது. ஆனாலும் சில வைத்தியர்கள், சித்துவேலை செய்பவர்கள் இங்கு வந்து மூலிகைகளை மட்டும் பறித்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில்தான் 1926ம் ஆண்டு தென்காசி அருகே முத்துமாலைபுரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவருடைய கனவில் முருகப்பெருமான் தோன்றி தான் தோரணமலையின் உச்சியில் உள்ள சுனையில் கிடக்கிறேன் என்றும் தன்னை எடுத்து வழிபடுமாறும் கூறினார்.
மறுநாள் பெருமாள் தன்னுடைய வேலையாட்களுடன் இங்கு வந்து சுனைத் தண்ணீரை இரைத்தபோது அங்கே முருகன் சிலை இருந்தது தெரியவந்தது-.
அதனை இந்த குகைக்குள் வைத்து வழிபட்டார். அதன்பின் இந்த முருகன் கோவில் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் தெரியவர அவர்களும் வந்து வழிபட்டு சென்றனர்.
தோரணமலையில் அகத்தியர் பாடசாலைகளை அமைத்திருந்தார் என்பதை இங்கே உள்ள பாடல் மூலம் அறியலாம். பாடலில் தோரணமலை தோரணகிரி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தப் பாடல் அகத்திய வைத்திய சேகரத்தில் உள்ளது.
“மாமலரால் திருமாலுடனே வாணிமாமலரால்திருமாலுடன வாணி
மலைமகளாம்அம்பிகையாள் நின்றபாதம்மலைமகளாம் அம்பிகையாள் நின்ற பாதம்
குஞ்சரமும் ஆறுமுகனை அளித்தான்தனைகுஞ்சரமும் ஆறுமுகனை அளித்தான்தனை
ஆலமதில் ஆற்றாதும் போற்றல் செய்துஆலமதில் ஆற்றாதும் பாற்றல்செய்து
பொங்குறவே தோரணகிரி ஒட்டிபொங்குறவதாரணகிரி ஒட்டி
பயிற்சி முகாம் அதனின் தனமிசைபயிற்சி முகாம் அதனின் தனமிசை
தெளிவு காண ஆரல்சார் தேயம் ஒட்டிதெளிவு காண ஆரல்சார் தயம்ஒட்டி
ஆரம்ப பண்டித சித்த பயிற்சியத்தின்ஆரம்ப பண்டித சித்த பயிற்சியத்தின்
குருகுல வாசமதின் தோரணத்தின் வரிசைஒட்டிகுருகுல வாசமதின் தாரணத்தின்வரிசைஒட்டி
பயிற்சி பெறும் பாடத் திட்டமிசைபயிற்சி பெறும் பாடத் திட்டமிசை
சித்தர்சார் பண்டிதத்தின் தனம் கேள்...”
என்று பாடப்பட்டு உள்ளது.
தோரணமலை என்ற தோரணகிரி பயிற்சி கூடத்தில் சீனா உள்பட உலகின் பல்வேறு இடங்களில் இருந்து தமிழ் மருத்துவம் பயில சீடர்கள் பலர் வந்தனர். இந்த தோரணகிரியையே தலைமை இடமாக கொண்டு நாடுகள் தனில் ஐந்த சபைகள் உருவாக்கப்பட்டன. அவைகளை சிவபெருமான் நடனம் புரிந்த திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய பகுதிகள். அங்கு ஆராய்ச்சி சபைகள் நிறுவப்பட்டன. அவற்றிக்கு கிளைகளாக பல்வேறு பகுதிகளில் பண்டித பாடசாலைகள் உருவாக்கப்பட்டன. அவையே இலஞ்சி என்றும் மருதமலை என்றும் ஆவினன்குடி(பழனி) என்றும் கொள்ளிமலை என்றும் சித்தர்குகை என்றும் அவன் அவளாய் நின்ற மலை என்றும் அழைக்கப்பட்டன.
இதை விளக்கும் பாடல் ஒன்று...
“தோரணகிரி பயிற்சி முகாம் தன்னில்
தொடர்துவாய் ஆங்காங்கே
அவைசார்பாக கூடமெனும்
கனகஅவை தில்லையாக, ரசித அவை
கயல்விழி எல்லை ஒட்டி
தாம்பர அவை காந்திமதி எல்லை
இரத்தின அவை என திருஆலங்காடு
சித்திர அவை கூடமெனு அசலம்சார்
குன்று ஒட்டி வரிசையதாய் கிளை
பலவும் தோரணகிரி இலஞ்சி ஒட்டி
அசலம்சார் குன்றுதனில்
மருதமலை, ஆவினன்குடி, சித்தர்குகை
அவன் அவளாய் நின்ற மலை
கொள்ளிமலை எனபல நிலையில்
தோரணகிரி பயிற்சி முகாம்
என அமைப்பை ஒட்டி
சித்தம் சார் பண்டிதத்தை பயிற்சி
பெற பண்டித பாடத்திட்டம் கேள்...”
மேற்கண்ட இரண்டு பாடல்கள் மூலம் தோரணமலையின் அரிய சிறப்புகளை நாம் அறியலாம்.