எதிர்கால திட்டங்கள்
தோரணமலை எத்தனையோ வளர்ச்சிகளை கண்டு உள்ளது. ஆனாலும் அங்கு நாளுக்குநாள் பக்தர்களுக்கான வசதிகள் பெருகிக் கொண்டே இருக்கிறது. மேலும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
* கோவில் என்றால் கோபுர தரிசனம் முக்கியத்துவம் பெறும். அந்த வகையில் தோரணமலையில் அழகுடன் கோபுரம் கட்டப்படும்.
* பக்தர்கள் தங்கிச் செல்ல கூடுதல் அறைகள் மற்றும் மண்டபங்கள் கட்டப்படும்.
* தற்போது இருக்கும் கழிவறைகளையும், குளியறைகளையும் நவீன முறையில் புதுப்பிக்கப்படும்.
* பக்தர்கள் தியானம் செய்ய தனி கூடம் கட்டப்படும்.
* உற்சவ மூர்த்திகளுக்கு தனி சன்னதி அமைக்கப்படும்.
* சிறுவர்கள் பூங்கா மற்றும் ஆன்மிக பூங்கா உருவாக்கப்படும்.
* கோவில் வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்த மறைந்த அறங்காவலர் ஆதிநாராயணன் அவர்கள் நினைவாக ஒரு மண்டபம் அமைக்கப்படும்.
* அடிவாரத்தில் உள்ள சுனைகள் மேலும் புனரமைக்கப்படும்.