இயற்கை அழகு)மூலிகை வனம் தோரணமலை
தோரணமலை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள பெரிய குன்று. இந்தப்பகுதியி்ல் இருக்கும் குன்றுகளில் இது இயற்கை அழகை பெற்றிருக்கிறது. இந்த மலை பாறைகளும், புதர்களும் நிறைந்து இருக்கிறது. ஆங்காங்கே மரங்கள். இவைகளில் இயற்கையாய் மூலிகை செடிகள் பரந்து விரிந்து காணப்படுகிறது. இதுதவிர மலையை பல்வேறு சுனைகள் இருக்கின்றன. இவைகளில் பெரும்பாலானவை வற்றாத நிலையில் உள்ளவை. இப்படி பசுமையும் குளுமையும் இயற்கையாய் அமைந்தது, இந்த தோரணமாலை.
பொதுவாக இரண்டு நதிக்களுக்குள் இருக்கும் பூமி புனிதமானது. அந்த வகையில் இந்த மலைக்கு தென்புறம் ராமநதி உற்பத்தியாகி ஓடி வருகிறது. வடபுறம் ஜம்புநதி என்ற நாவல் நதி உற்பத்தியாகிறது. இந்த இரு நதிகளும் இந்த தோரணமலை முருகனுக்கு மாலையாய் அமைந்து உள்ளன.
ராமநதியும் ஜம்பு நதியும் கடையத்தி்ற்கு தென்புறம் ஒன்றாய் இணைகிறது. இந்த நதிகளுக்கு இடையே மக்கள் வசிக்கும் ஊர் கிடையாது. ஆனால் தோட்டங்களும், வயல்வெளிகளும் உண்டு. நிரந்தரமாக தங்க இதுவரை வீடுகள் அமையவில்ை