கோவிலுக்குச் செல்வது எப்படி?

தோரணமலை தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கடையம் பெரும்பத்து கிராமத்தில் அமைந்துள்ளது. தென்காசிக்கும் கடையம் நெஞ்சாலையில் இருந்து மூன்று கிலோமீட்டா தூரம் மேற்கே இத்தலம் அமைந்துள்ளது.
இந்தக் கோலுக்கு தென்காசி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து வரலாம்.
பஸ்சில் வருபவர்கள் தென்காசியில் இருந்து கடையம் வரும் வழியில் தோரணமலை விலக்குப்பகுதியில் இறங்கி அங்கிருந்து மினி பஸ்சில் கோவிலுக்கு வரலாம். இல்லை என்னால் அந்தப்பகுதியில் ஆட்டோக்கள் நின்கின்றன. அதன் முலமாகவும் வரலாம்.
திருநெல்வேலியில் இருந்து வருபவர்கள் கடையம் வழிகாகவும் வரலாம். அல்லது திருநெல்வேலியில் இருந்து தென்காசி வரும் பஸ்சில் ஏறி அங்கிருந்து வரலாம். அல்லது திருநெல்வேலி-தென்காசி பஸ்சில் ஏறி இடையில் பாவூர்சத்திரம் இறங்கி அங்கிருந்து மினி பஸ்சில் தோரணமலை வரலாம். ஆனால் மினி பஸ் அடிக்கடி இருக்காது.
கன்னியாகுமரியில் இருந்து வருபவர்கள் சேரம்மகாதேவி, அம்பாசமுத்திரம் வழியாக தென்காசி வரும் பஸ்சில் வரலாம். அவர்கள் கடையத்தை தாண்டி தோரணமலை விலக்கில் இறங்கி கோவிலுக்குச் செல்ல வேண்டும்.
ரெயில் மார்க்கமாக வருபவர்கள் தென்காசி வரை வரலாம். திருநெல்வேலி வந்தும் வரலாம்.