தோரணமலையின் படிக்கட்டுக்கள்
தோரணமலை உச்சியில் முருகப்பெருமான் குகையில் கொலுவீற்றிருக்கிறார். அடிவாரத்தில் இருந்து முருகன் சன்னதிக்கு செல்ல சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மலை ஏற வேண்டியதிருக்கும். அந்த காலத்தில் மலை ஏற படிக்கட்டுகள் கிடையாது. செங்குத்தான் பாறையில் ஏற இரண்டு இடங்களில் மட்டும் லேசாக படிக்கட்டுகள் செதுக்கு பிடிக்க கைப்படி வைத்து இருப்பார்கள். மற்றபடி படிக்கட்டுகள் ஏதும் கிடையாது. பக்தர்கள் கல்லிலும், புதரிலும் மிதித்தும் தாண்டியும்தான் மலை ஏறுவார்கள்.
நாளடைவில் பக்தர்களின் பாதங்கள் மூலம் உருவான பாதை நடக்க ஓரளவு எளிதாக இருந்தது. அதன்பின் அருளாளர்கள் பலர் படிக்கட்டுகள் அமைத்து கொடுத்தனர். அந்தப்படிகள் பல சிறியதாவும் செங்குத்தாகவும் இருந்தன. இதனால் வயதானவர்களால் எளிதாக ஏற முடியாது.
தற்போது எல்லோரும் எளிதாக ஏறும் வண்ணம் உயரம் குறைந்த அளவில் அதேநேரம் அகலமாகவும் படிக்கக்கட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. பக்தர்கள் இளைபாற மலைப்பாதையில் 5 இடங்களில் மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அந்த மண்டபங்களில் முருகன் சிலையோடு சித்தரைகள் சிலையும் அமைக்கப்பட்டு உள்ளன.