தேரரணமலையை அலங்கரிக்கும் சுனைகள்
தோரணமலையில் மொத்தம் 64 சுனைகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சிலவற்றையே நம்மால் பார்க்க முடிகிறது. மலை அடிவாரத்தில் கோவிலின் தென்புறம் இரண்டு சுனைகள் இருக்கின்றன. மலை உச்சியில் முருகப்பெருமானுக்கு வடபுறம் சற்று உயரத்தில் ஒரு பிரதான சுனை உள்ளது. இங்குதான் அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.
வழியில் லட்சுமி தீர்த்த சுனை ஒன்று உள்ளது. இங்கு எந்த கோடையிலும் தண்ணீர் வற்றாது. இங்கு தீர்த்தமாட வசதியாக தடுப்பு சுவர் அமைத்து தண்ணீர் இறைக்க கப்பி, வாளி போடப்பட்டு உள்ளது.
மேலும் மலைஏறும் வழியில் ஊற்றுபோல சிறிய சுனை ஒன்று உள்ளது.
மலை மீதுள்ள முருகன் சன்னதிக்கு வலப்புறம் பாறைக்கு ஒரு பொந்து போன்ற சுனை உள்ளது. அதிலும் தண்ணீர் வற்றுவது கிடையாது.
மலை உச்சியில் தாமரை சுனை ஒன்று உள்ளது. இதன் அருகே யாரும் செல்ல முடியாது. அந்த சுனையில் தாமரை மலர்ந்திருப்பதாக கூறப்படுகிறது