இருப்பிடத்தை கனவில் காட்டினார்

தோரமலையி்ல் முருகப்பெருமான் குகையில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இந்த முருகப்பெருமானை பிரதிஷ்டை செய்து வணங்கியவர்கள் சித்தர்கள். அகத்தியர் இங்கு மூலிகை ஆராய்ச்சி மையத்தை தொடங்கியபோது, அந்த குழுவில் பல்வேறு சித்தர்கள் இடம் பெற்றுள்ளனர். சித்தர்கள் தாங்கள் வழிபடுவதற்காக அமைத்த தெய்வம்தான் முருகன்.
காலங்கள் கடந்தன. யுகங்கள் தோன்றி மறைந்தன. அதனால் இந்த இடத்தில் சித்தர் ஆராய்ச்சிக்கூடம் இருந்தது என்பதற்கான நினைவும் மக்கள் மனதில் இருந்து மறந்துபோனது. எப்படியோ குகைக்குள் வைத்து வழிபட்ட முருகன் சிலையும் காணாமல் போனது.
அப்புதமான இந்த மலை ஆடு, மாடு மேயும் காடாக மாறியது. இங்குள்ள சுனைகள் அவைகளின் தாகத்தை போக்கியது. ஆனாலும் சில வைத்தியர்கள், சித்துவேலை செய்பவர்கள் இங்கு வந்து மூலிகைகளை மட்டும் பறித்துச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில்தான் 1926ம் ஆண்டு தென்காசி அருகே முத்துமாலைபுரத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவருடைய கனவில் முருகப்பெருமான் தோன்றி தான் தோரணமலையின் உச்சியில் உள்ள சுனையில் கிடக்கிறேன் என்றும் தன்னை எடுத்து வழிபடுமாறும் கூறினார்.
மறுநாள் பெருமாள் அவர்கள் தன்னுடைய வேலையாட்களுடன் இங்கு வந்து சுனைத் தண்ணீரை இரைத்தபோது அங்கே முருகன் சிலை இருந்தது தெரியவந்தது-.
அதனை இந்த குகைக்குள் வைத்து வழிபட்டார். அதன்பின் இந்த முருகன் கோவில் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் தெரியவர அவர்களும் வந்து வழிபட்டு சென்றனர்.
பெருமாள் அவர்கள் வம்சத்தில் வந்த ஆசிரியர் ஆதிநாராயணன் அவர்கள் இந்த கோவில் வளர்ச்சிக்கு பெரும் முயற்சி எடுத்தார். அவருக்குப்பின் அவருடைய மகன் செண்பகராமன் இந்தக் கோவிலுக்கு பரம்பரை அறங்காவராக நின்று பாடுபட்டு வருகிறார்.
இது சித்தர்கள் வழிபட்ட முருகன் என்பதால் சக்திவாய்ந்த தெய்வமாக இருக்கிறார்