கிரிவலம்

குன்றின் மேல் குமரன் இருந்து அருள்பாலிப்பார். அதனால்தான் முருகப்பெருமானை குறிஞ்சி நிலக்கடவுள் என்று அழைப்பார்கள். மலையை சிவபெருமானாக நினைத்து இந்துக்கள் வழிபடுவார்கள். அந்த மலையில் கோவில் கொண்டுள்ளார் முருகப்பெருமான்.
அப்படி சிறப்பு மிக்க மலையை வலம் வருவது சிறந்த பலனைத் தரும். அதுவும் பவுர்ணமி அன்று கிரிவலம் வந்தால் கூடுதல் பலன் கிடைக்கும். அதனால்தான் திருவண்ணாமலையில் கிரிவலம் சிறப்பு பெற்று விளங்குகிறது.
அதேபோல் தற்போது தோரணலையிலும் கிரிவலம் சிறப்பு பெற்று வருகிறது. மாதந்தோறும் பவுர்ணமி இருக்கும் காலைப் பொழுதில் இங்கு கிரிவலம் நடத்தப்படுகிறது. இது காடு, மலை நிறைந்த பகுதி என்பதால் பக்தர்கள் கிரிவலம் செல்ல ஆசைப்பட்டால் கோவில் நிர்வாகத்தினர் குறிப்பிட்ட பவுர்ணமி நாளில் வரச்சொல்லி மற்ற பக்தர்களோடு கிரிவலம் செய்ய அனுப்புவார்கள்.