தமிழ்ப் புத்தாண்டு

ஒரு காலத்தில் சித்திரை விசு என்று அழைக்கப்படும் தமிழ் புத்தாண்டு அனறு இந்தப் பகுதி மக்கள் பாபநாசத்திற்கும், குற்றாலத்திற்கும் செல்வார்கள். ஆனால் இப்போது தோரணமலைக்கும் பக்தர்கள் மிக அதிக அளவி்ல் வருகிறார்கள். அன்றை தினம் பக்தர்கள் மலை மீதள்ள சுனையில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு உற்சவர்கள் முருகன்-வள்ளி, செய்வானைக்கு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. அன்று பூஜையில் விவசாயக்கருவிகளை வைத்து பூஜை செய்கிறார்கள் மேலும் விவாசயிகள் முன்னிலையில் சமூக தொண்டு செய்வோருக்கு ஸ்ரீதோரணமலையான் விருது வழங்கப்படுகிறது. அன்றைய தினம்
பாவூர்சத்திரம் லோட்டஸ் மழலையர் பள்ளி குழுந்தைகளின் கலை நிகழ்ச்சி நடைபெறும்