நவக்கிரக தோஷங்களை போக்கும் மலை
பொதுவாக தெய்வங்களுக்கு கட்டுப்பட்டதுதான் கிரகங்கள். ஆனாலும் கிரங்கள் தன்னிச்சையாக செயல்பட இறைவன் அருள் கொடுத்துள்ளார். தேவதைகளை வழிபட்ட பின்னர்தான் மூலஸ்தானத்தில் உள்ள இறைவனை வணங்க வேண்டும். அப்படி வணங்கினால்தான் தெய்வத்தின் முழு பலன் கிடைக்கும். அதேபோல்தான் தெய்வ வழிபாடுதான் முக்கியம் என்றாலும் தெய்வத்தின் கட்டளையை நிறைவேற்றும் நவக்கிரகங்களும் வழிபாட்டுக்கு உரியவர்களே. எனவேதான் இந்து மத்தில் நவ்ககிரக வழிபாடும் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.
தோரணமலைக்கு வந்தால் நவக்கிரகங்களின் எந்த தோஷமும் விலக நன்மைகள் கிடைக்கும்.
அதாவது பொதுவாக தோஷங்களில் செவ்வாய் தோஷம் பெரிதாக பேசப்படுகிறது. ஆனால் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகன் கோவிலுக்குச் சென்று வந்தால் நிவர்த்தியாகும் என்பார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் சூரனை வதம் செய்ய முருகனை அவதரிக்க வைத்தது சிவபெருமான். அதேபோல் அந்தகாசூரனை கொல்ல அவனது ரத்தத்தை குடிக்க சிவபெருமானால் படைக்கப்பட்டதுதான் செவ்வாய். அந்த வகையில் செவ்வாய், முருகனினுக்கு தம்பிமுறை. எனவே முருகப்பெருமானை வணங்கினால் செவ்வாய் தனது ஆக்ரோஷத்தை குறைந்து நிவர்த்தி அளிப்பார். அந்த வகையில் தோரணமலை முருகனும் செவ்வாய் கிரகத்தின் தோஷங்களை போக்க வல்லவர்.
செவ்வாய் வைத்தியத்திற்கு காரகனாக விளங்குகிறார். தோரணமலை ஒரு காலத்தில் வைத்தியசாலையாகவும் இருந்தது. அந்த வகையில் இந்தபகுதி செவ்வாய் அருள் நிறைந்ததாக போற்றப்படுகிறது.
தந்தைக்கே குருவாக இருந்து ஞானம் போதித்தவர் முருகப்பெருமான் என்பதாலும், திருச்செந்தூரில் சூரனை பற்றிய வரலாறை வியாழன் என் குரு எடுத்து சொன்னதாலும் குருவின் அருளை பெற முருகனை தரிசித்தான்போதும். மேலும் அகத்தியர் சீடர்களுக்கு பாடம் நடத்திய இடம் இது என்பதால் இங்கு குருவின் அருள் தானாக கிடைத்துவிடும். தோரணமலை என்பது யானை தோற்றத்தில் இருக்கும் மலை. குருவின் வாகனம் யானை. அந்த வகையிலும் குருவின் அருள் இந்த மலைக்கு உண்டு.
மலைமீதுள்ள முருகப்பெருமானை தினமும் காலையில் சூரியன் தரிசனம் செய்கிறார். அதேபோல் பவுர்ணமி நாளில் சந்திரனும் முருகனை நேராக தரிசனம் செய்கிறார். அந்த வகையில் இந்த இரு கிரகங்களின் அருளும் இத்தலத்தில் தடையின்றி கிடைக்கும்.
ஜோதிடத்தில் புதன் கல்விகாரகன். முதன்முறையாக பாடசாலை அமைந்த இடம் தோரணமலை. அப்படியானால் இந்த இடம் புதனின் ஆதிக்கத்தில்தானே இருந்திருக்க வேண்டும். அந்த வகையில் இத்தலம் புதனின் அருள் நிறைந்ததாகவே இருக்கும். மேலும் புதனுக்கு உரிய நிறம் பசுமை.இந்த மலை எப்போதும் பசுமை நிறைந்ததாக இருக்கும். அந்த நிலையில் பார்த்தாலும் புதனின் அருள் தோரணமலையில் எப்போது உண்டு.
எந்த ஒரு ஆலயத்திலும் தம்பதி சகிதமாக இறைவன் இருந்தால் அங்கே சுக்கிரனின் அருள் கண்டிப்பாக இருக்கும். அந்த வகையில் இங்கு முருகப்பெருமான் ( உற்சவர்) வள்ளி தெய்வானையுடன் உள்ளார். அதனால் இவரை வணங்கினால் சுக்கிரனின் அருள் கிடைக்கும். மேலும் கலைக்கு காரகன் சுக்கிரன். நடனக்கலையின் வித்கனான சிவபெருமான் ஆடும் நடராஜர் கோலகத்தில் உற்சவராக இங்கே இருக்கிறார். அந்த வகையில் அவரை வணங்கினால் சுக்கிரனின் அருள் கிடைக்கும். மேலும் சுக்கிரனுக்கு உரிய சமித்து அத்தி. அந்த மரங்கள் இத்தலத்தில் அதிகம் உள்ளது. எனவே சுக்கிரனின் அருள் நிறைந்த தலமாகவும் இது விளங்குகிறது.
சனிபகவானின் நிறம் கருமை. அந்த கரும் பாறைகளை கொண்டதுதா£ன் தோரமலை. அந்த கரும்பாறை குகைக்குள்தான் முருகப்பெருமான் உள்ளார். எனவே சனிபகவானின் தோஷங்கள் அனைத்தும் இந்த மலையை பார்த்தாலே விலகிவிடும்.
அது ராகு-கேது கிரகங்கள். இவை இரண்டும் சாயா கிரகங்கங்கள். ராகு சனி பகவானையும், கேது செவ்வாயையும் சார்ந்து இருக்கும். எனவே அவர்கள் இருவரின் மூலம் இந்த இருகிரகங்களின் பலனும் கிடைக்கும். அதோடு இங்கே பக்திரகாளியும், சப்த கன்னியரும் உள்ளனர் இவர்களை வணங்கினால் ராகு, கேது தோஷங்கள் விலகும்.
இப்படி நவக்கிரங்களின் அருள் இங்கு கிடைக்கும்.