தோரணமலை அருளால் வளர்ந்த வள்ளியம்மாள்புரம் திருமுருகன் உயர்நிலைப்பள்ளி

நெல்லை மாவட்டம் கடையம் பஞ்சாயத்து யூனியனில் உள்ள ஊர்தான் வள்ளியம்மாள்புரம். இந்த குக்கிராமத்தின் பெயரை சொன்னவுடன் நமது நினைவுக்கு வருவது அங்குள்ள திருமுருகன் பள்ளிக்கூடம்தான். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே திருநெல்வேலி மாவட்டத்தில் பெயர்பெற்ற பள்ளிக்கூடமாக விளங்கியது. பல்வேறு ஊர்களில் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளை இங்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களுக்காக இங்கு மாணவர் விடுதியும் அப்போதே ஆரம்பிக்கப்பட்டது. விடுதியின் கட்டுப்பாடு-ஒழுங்கு, சிறப்பு போன்றவை பெற்றோர்களை மிகவும் கவர்ந்தது. இதனால் மிக அருகில் வசிப்பவர்களே தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி அவர்களை விடுதியில் தங்க ஏற்பாடு செய்தனர்.
இத்தனை பெருமைக்கும் உரியவர் நாடாக்கண்ணு நாடார். இவர்தான் அந்த பள்ளிக்கூடத்தை 1949-ம் ஆண்டு தொடங்கினார். அவரின் முயற்சியல் தற்போத உயர்நிலைப்பள்ளி அளவுக்கு உயர்ந்துள்ளது.
நாடாக்கண்ணு நாடார் தீவிர முருகப்பக்தர். இதனால்தான் தனது பள்ளிக்கூடத்துக்கு திருமுருகன் என்று பெயர் வைத்தார். திருமுருக கிருபானந்த வாரியாரின் விசுவாசி. அவரை அந்த காலத்திலே தனது பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வந்து அருளுரை வழங்க வைத்தார்.
நாடாக்கண்ணு நாடார் தோரணமலை முருகன் மீது அபார பக்தி கொண்டவர். பள்ளியின் வெற்றிக்கு தோரணமலை முருகன் அருளே காரணம் என்று மனப்பூர்வமாக நம்பியவர். அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதித் தேர்வுக்கு முன்னால் மாணவர்களை இங்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை நடத்தி வழிபடுவார். முருகனின் அருளால் மாணவர்கள் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுவார்கள். மேலும் கோவிலல் நடக்கும் தைப்பூச திருநாளின்போது திருமுருகன் பள்ளி மாணவ&மாணவிகளை இங்கு அழைத்து வந்து கலைநிகழ்ச்சிகளையும் நடத்த ஏற்பாடு செய்வார்.
கல்விப்பணியோடு இறை பணியையும் செய்து வந்த நாடாக்கண்ணு நாடார் இறைவனுடன் ஐக்கியமான பின்னர் அவரது பணியை மகன் திருவருள் குமரன் மேற்கொண்டார். அவரும் பள்ளியின் மேம்பாடுக்கு உழைத்ததோடு, இறைபணியையும் செவ்வனே செய்து வந்தார். அவரும் இறைவடி சேர்ந்த பின்னர் அன்னாரது மனைவி ஜெயமதி பள்ளிக்கூடத்தின் மேன்மைக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அவரும் தோரணமலை முருகன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவர் கூறுகிறார்...
என்னுடைய மாமனார் தோரணமலை முருகன் மீது அபார பக்தி கொண்டவர். எதை தொடங்கினாலும் அவரின் சன்னதிக்கு வந்து அவரின் அருளாசி பெற்றே செய்வார். அந்த காரியம் முருகன் அருளால் வெற்றிகரமாக முடியும். அவரால் எங்கள் குடும்பமே முருகப்பெருமானுக்கு அடிமையானோம். அன்றைய நாள் பள்ளிக்கூடத்தில் அவர் இருக்கும் அறையே ஒரு கோவில் போல் விளங்கும். அந்த அறைக்குள் வந்தாலே தெய்வீக மனம் கமளும். அவர் தீவிர கிருபானந்தவாரியாரின் பக்தர். அவரது அலுவலகத்தில் முருகன் படங்களுடன் கிருபானந்த வாரியாரின் படமும் உண்டு. முருகனின் அருளால்தான் பள்ளிக்கூடம் இத்தனை வளர்ச்சி பெற்றது என்று அடிக்கடி கூறுவார். அவரின் வாரிசான எனது கணவர் திருவருள் குமரன் அவர்களும் தந்தை வழியில் இறை பணி மற்றும் கல்விப்பணிக்கு தன்னை அர்ப்பணித்தார். அவர் தெய்வத்திருவடியில் கொலுவேற்க சென்றபின் அவர்கள் வழியில் நாங்கள் உழைத்து வருகிறோம். இப்போது அவரது ஆசியும் எனது கணவரின் ஆசியும் கூட சேர்ந்து இந்தப் பள்ளிக்கூடத்தை வளர்ச்சி அடைய வைக்கிறது.நெல்லை மாவட்டம் கடையம் பஞ்சாயத்து யூனியனில் உள்ள ஊர்தான் வள்ளியம்மாள்புரம். இந்த குக்கிராமத்தின் பெயரை சொன்னவுடன் நமது நினைவுக்கு வருவது அங்குள்ள திருமுருகன் பள்ளிக்கூடம்தான். சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே திருநெல்வேலி மாவட்டத்தில் பெயர்பெற்ற பள்ளிக்கூடமாக விளங்கியது. பல்வேறு ஊர்களில் உள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளை இங்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவர்களுக்காக இங்கு மாணவர் விடுதியும் அப்போதே ஆரம்பிக்கப்பட்டது. விடுதியின் கட்டுப்பாடு& ஒழுங்கு, சிறப்பு போன்றவை பெற்றோர்களை மிகவும் கவர்ந்தது. இதனால் மிக அருகில் வசிப்பவர்களே தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி அவர்களை விடுதியில் தங்க ஏற்பாடு செய்தனர்.
இத்தனை பெருமைக்கும் உரியவர் நாடாக்கண்ணு நாடார். இவர்தான் அந்த பள்ளிக்கூடத்தை 1949&ம் ஆண்டு தொடங்கினார். அவரின் முயற்சியல் தற்போத உயர்நிலைப்பள்ளி அளவுக்கு உயர்ந்துள்ளது.
நாடாக்கண்ணு நாடார் தீவிர முருகப்பக்தர். இதனால்தான் தனது பள்ளிக்கூடத்துக்கு திருமுருகன் என்று பெயர் வைத்தார். திருமுருக கிருபானந்த வாரியாரின் விசுவாசி. அவரை அந்த காலத்திலே தனது பள்ளிக்கூடத்துக்கு அழைத்து வந்து அருளுரை வழங்க வைத்தார்.
நாடாக்கண்ணு நாடார் தோரணமலை முருகன் மீது அபார பக்தி கொண்டவர். பள்ளியின் வெற்றிக்கு தோரணமலை முருகன் அருளே காரணம் என்று மனப்பூர்வமாக நம்பியவர். அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் பள்ளி இறுதித் தேர்வுக்கு முன்னால் மாணவர்களை இங்கு அழைத்து வந்து சிறப்பு பூஜை நடத்தி வழிபடுவார். முருகனின் அருளால் மாணவர்கள் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெறுவார்கள். மேலும் கோவிலல் நடக்கும் தைப்பூச திருநாளின்போது திருமுருகன் பள்ளி மாணவ&மாணவிகளை இங்கு அழைத்து வந்து கலைநிகழ்ச்சிகளையும் நடத்த ஏற்பாடு செய்வார்.
கல்விப்பணியோடு இறை பணியையும் செய்து வந்த நாடாக்கண்ணு நாடார் இறைவனுடன் ஐக்கியமான பின்னர் அவரது பணியை மகன் திருவருள் குமரன் மேற்கொண்டார். அவரும் பள்ளியின் மேம்பாடுக்கு உழைத்ததோடு, இறைபணியையும் செவ்வனே செய்து வந்தார். அவரும் இறைவடி சேர்ந்த பின்னர் அன்னாரது மனைவி ஜெயமதி பள்ளிக்கூடத்தின் மேன்மைக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அவரும் தோரணமலை முருகன் மீது மிகுந்த பக்தி கொண்டவர். அவர் கூறுகிறார்...
என்னுடைய மாமனார் தோரணமலை முருகன் மீது அபார பக்தி கொண்டவர். எதை தொடங்கினாலும் அவரின் சன்னதிக்கு வந்து அவரின் அருளாசி பெற்றே செய்வார். அந்த காரியம் முருகன் அருளால் வெற்றிகரமாக முடியும். அவரால் எங்கள் குடும்பமே முருகப்பெருமானுக்கு அடிமையானோம். அன்றைய நாள் பள்ளிக்கூடத்தில் அவர் இருக்கும் அறையே ஒரு கோவில் போல் விளங்கும். அந்த அறைக்குள் வந்தாலே தெய்வீக மனம் கமளும். அவர் தீவிர கிருபானந்தவாரியாரின் பக்தர். அவரது அலுவலகத்தில் முருகன் படங்களுடன் கிருபானந்த வாரியாரின் படமும் உண்டு. முருகனின் அருளால்தான் பள்ளிக்கூடம் இத்தனை வளர்ச்சி பெற்றது என்று அடிக்கடி கூறுவார். அவரின் வாரிசான எனது கணவர் திருவருள் குமரன் அவர்களும் தந்தை வழியில் இறை பணி மற்றும் கல்விப்பணிக்கு தன்னை அர்ப்பணித்தார். அவர் தெய்வத்திருவடியில் கொலுவேற்க சென்றபின் அவர்கள் வழியில் நாங்கள் உழைத்து வருகிறோம். இப்போது அவரது ஆசியும் எனது கணவரின் ஆசியும் கூட சேர்ந்து இந்தப் பள்ளிக்கூடத்தை வளர்ச்சி அடைய வைக்கிறது.