சப்தகன்னியர் வழிபாடு
அந்தகாசுரனின் ரத்தத்தில் உதித்திட்ட
ஆயிரமாயிரம் அசுரர்களை அழிக்க
அடுத்தடுத்த அவதரித்த கன்னியரே...
தோரணமலை அடிவார சுனைக்கருகில்
தோரணயாய் அமர்ந்திருக்கும் பெண்ணியரே
அத்திமர நிழலில் ஆனந்தமாய் வீற்றிருந்து
பத்திரமாய் காத்திடுவாய் பாங்குடனே
தீவினையை அழிக்க காத்திருக்கும் தாயே
உங்களை வணங்குகிறேன் தாழ்பணிந்து
எங்களை வாழவைப்பாய் அன்னையரே
பிரம்மன் படைத்திட்ட பிராம்பமி தாயே
அன்னப்பறவையிபடைப்பு கடவுளாம் பிரம்மனின் அம்சமாய் வந்த
பிராம்மி படைப்பின் கடவுளான பிரம்மாவின் அம்சமாவார்.
நான்கு கரங்களை உடையவளே. அன்னப்பறவையில் அமர்ந்திருப்பவளே
கள்ளமில்லா மனதை தந்தருள்வாய்
மகேஸ்வரனின் அம்சமாய் உதித்த மகேசுவரியே
மங்களம் தந்து மகிழ்விப்பாய் தாயே
ஐமுகமும் முக்கண்ணும் கொண்டவளே
ஐயங்கள் அகல அருள்புரிவாய் அம்மையே
கௌமாரியே கரங்கள் நான்கை கொண்டவளே
காத்திட வந்திடுவாய் மயிலேறி
முருகனின் அருளையும் தந்திடுவாய்
மனமுருக வேண்டுகிறேன் தாயே
வையகம் காத்திடும் திருமாலின் அம்சமாய்
வந்திட்ட நாராயிணியே வைஷ்ணவி தேவியே
சங்கும் சக்கரமும் தாங்கி வந்து
சலமும் தந்திருடுவாய்
இந்திரனின் அம்சமான இந்திராணியே
அம்பினையும் ஆயுதமாக கொண்டவளே
ரத்தின கிரீடம் தரித்தவளே
வெண் யானையில் வந்து வெற்றியை தந்து அதிகாரத்தையும் கொடுப்பாய் தாயே
ருத்தினால் உருவான சாமுண்டியே
சண்டர் முண்டரை அழிக்க வந்தவளே
நின் கோரை பற்களால் துன்பத்தை பறக்க வைப்பாயே