குழந்தை வரம் அருளிய குகை வாசன்
தோரணமலையில் படிக்கட்டுகள் கட்ட உதவிய சிவகாசி தொழில் அதிபர்கள் பலர் இந்தக் கோயிலுக்கு வந்ததே கிடையாது. ஆனாலும் தோரணைமலை குகையில் வாசம் செய்யும் முருகப்பெருமான் அவர்களுக்கு அருள் வழங்க தவறியதே இல்லை.
ஓரியன்ட் லித்தோ பிரஸ் உரிமையாளர் சவுந்தர நாடாரின் மகன் சந்திரநாத். சந்திரநாத் திருமணமானவுடன் அவருக்கு தோரணமலையான் அருளால் ஆண் குழந்தை பிறக்கும் என்று தோரணமலை பக்தரான குலசேகரபாண்டியன் கூறியுள்ளார். அதன்படி ஆண்குழந்தையே பிறந்தது.
ரத்னா பயர் ஹவுஸ் மோகன் மகள் திருமணத்திற்கு அழைப்பிதழை குலசேகரபாண்டியன் மூலம் தோரணமலையான் கோயிலுக்கு கொடுத்து அனுப்பினார். அவரது மகளுக்கு ஆண்குழந்தை பிறந்தது.
ஆறுமுகம் பயர்ஹவுஸ் உரிமையாளர் ஏ.மாரியப்பன் நாடார் மகனுக்கும் ஆண்குழந்தை பிறந்தது.
சீமா பயர்ஹவுஸ் உரிமையாளர் பாலசுப்பிரமணியன் நாடாரின் ஒரே மகனுக்கு திருமணம் ஆன அடுத்த ஆண்டே ஆண் குழந்தை பிறந்தது.