இஸ்லாமிய பெண்ணுக்கு உதவிய முருகப்பெருமான்
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் வி.எஸ்.கிருஷ்ண மூர்த்தி. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் இவர் சித்தர்கள் பற்றிய தகவல்களை தேடி கண்டுபிடித்து படிப்பதில் ஆர்வம் உள்ளனர். அப்படி படிக்கும்போது தேரையரை பற்றி அறியும் வாய்ப்பு கிடைத்தது. தேரையர் தோரணமலையில் வசித்தவர் என்றும் அகத்தியர் செய்த கபால அறுவை சிகிச்சைக்கு மிகவும் உதவியாக இருந்தவர் என்பதும் தெரிந்தார். அந்த தேரையர் வாழ்ந்த தோரண மலையை காணவேண்டும் என்றும் அங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமானை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் மிகுதியானது.
அந்த கோவிலில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறும் என்பதை தெரிந்து கொண்ட அவர் சுமார் பத்து ( 2007-ம் ஆண்டு ) வருடங்களுக்கு முன்னால் தோரணமலைக்கு வந்தார். அப்போது மலையில் முழுமையாக படிக்கட்டுகள் கட்டப்பபடவில்லை. மலைஏறும் பழக்கம் இல்லாத அவர் ஆவலில் எப்படியோ மலை ஏறத் தொடங்கினார். மாலை மீது ஏற... ஏற... மூச்சு வாங்கினாலும்... ஏதோ புத்துணர்ச்சி ஏற்பட்டதை உணர்ந்தார். மலை மீது பரந்து விரிந்து கிடக்கும் மூலிகைகளை தழுவி வரும் காற்றுதான் அந்த புத்துணர்ச்சிக்கு காரணம் என்பதை அறிந்து கொண்டார். மலை மீது ஏறிய பின்னர் அங்குள்ள சுனையில் நீராடியபோது களைப்பு முழுவதும் மறைந்து உள்ளமும் உடலும் புதுப்பொலிவுடன் காணப்பட்டதை உணர்ந்தார்.
மேலும் குகையில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானை தரிசனம் செய்யும் போது தெய்வ அருள் நம்முள் புகுவதை உணராம். அதன்பின் கீழ்புறம் இருக்கம் பத்திரகாளி அம்மனை தரிசனம் செய்து விட்டு அதன் அருகே சிறிது நேரம் அமர்ந்தால் நம்முடலில் ஒருவித காந்த அலைகள் பாய்வதை உணரலாம்.
தோரணமலை முருகப்பெருமானின் பெருமைகளை வி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார்...
சித்தர்கள் வரலாற்றை படித்துத்தான் நான் முதன்முதலாக தோரணமலைக்கு சென்றேன். 2007-ம் ஆண்டு நான் 7 பேருடன் முதலில் அங்கு சென்றேன். தற்போது 100க்கும் குறையாமல் அங்கு சென்று வருகிறோம். முருகப்பெருமானின் அருள் பக்தர்களுக்கு கிடைப்பதால் ஆண்டுதோறும் அங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அவர்கள் மனதில் எண்ணிக் கொண்டு வருவதை முருகப்பெருமான் நிறைவேற்றி வைக்கிறார்.
எங்கள் குழுவில் ஆரிப் என்ற இஸ்லாமிய சகோதரரும் வருவார். அவரது அக்காளுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதை என்னிடம் ஆரிப் பெருமையாக கூறினார். நானும் அவர் கூறியதை கேட்டு பூரிப்படைந்தேன். அவர், தோரணமலைக்கு வரும்போது தனது அக்காளுக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என்று வேண்டினாராம். அதன்படி குழந்தை பிறந்ததைத்தான் என்னிடம் கூறினார். உங்கள் உறவுக்காக நீங்கள் வேண்டினாலும் முருகப்பெருமான் அதை நிறைவேற்றி வைப்பார் என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.
இவ்வாறு கூறும் கிருஷ்ணமூர்த்திக்கு கீதா என்ற மனைவியும் ஸ்ரீவர்ஷினி, ஜெயஹருணி என்ற மகள்களும் உள்ளனர்.