இதய நோயை குணமாக்கிய முருகன்
பூ வியாபாரி பிரபுவுக்கு வயது 36. பெத்தநாடார் பட்டியைச் சேர்ந்தவர். ஒரு நாள் உடல்நலம் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனைக்கு சென்றார். அவரை பரிசோத்த மருத்துவர் இவரது இதய ரத்தகுழாயில் அடைப்பு இருப்பதாகவும் அதனை ஆஞ்சியோ பிளாஸ்ட் மூலம்தான் சரி செய்ய முடியும் என்றும் கூறிவிட்டார்.
இந்த சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் செலவாகும். மேலும் அந்த சிகிச்சைக்குப் பின்னர் தன்னால் முன்புபோல் வேலை செய்ய முடியுமா என்று பிரபு அச்சப்பட்டார். மூன்று குழந்தைகளுக்கு தந்தையான அவர் தோரணமலை முருகனே கதி என்ற தினமும் இங்கு வந்து சாமி கும்பிட்டுச் சென்று வந்தார். மேலும்
பாப்பான்குளம் சித்தா வைத்தியரிடமும் காட்டினார். அங்கு 6 ஆறுமாதம் சிகிச்சைப் பின் அவரது உடம்பை பரிசோதித்தபோது ரத்தக் குழாயில் அடைப்பு இல்லை என்பது தெரிய வந்தது.
கடைசி வெள்ளி தோறும் மலைமேல் உள்ள முருகனுக்கு வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்படுகிறது அல்லவா? அந்த பூக்களை பெங்களுருவில் இருந்து கொண்டு வர இவர்தான் ஏற்பாடு செய்து வருகிறார்.
மேலும் கடந்த 4 மாதமாக இவரும் பாலமுருகனும் மலையில் இருந்து தீர்த்த தண்ணீர் கீழே கொண்டு வந்து வர்ணகலச பூஜை செய்து வருகிறார்கள். காலையில் பக்தர்களுக்கு பொங்கல் வழங்க ஏற்பாடு செய்து வருகிறார்கள்.