தீராத நோயை குணமாக்கிய தோரணைமலையான்

டாக்டர்கள் சொன்னை வார்த்தை அந்த ஏழை விவசாயியை பெரிய துயரத்தில் ஆழ்த்தியது.
“உங்கள் மகனுக்கு ஆபரரேஷன் செய்ய வேண்டும்.”
- நீண்ட பரிசோதனைக்கு பின்னர் டாக்டரின் பரிந்துரைதான் இது.
“ஐயா எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. ஆபரேஷன் பண்ணுங்க. ஆபரேஷன் பண்ணினா என் மகன் நல்லபடியா குணமாயிடுவான்ல்ல?”
“குணமாயிடுவான். ஆனா....”
“ஆனா என்னய்யா...?”
“அவனுக்கு இப்போ பதினாறு வயசு. நாற்பது வயசு வரைக்கும் அவன் கடினமான வேலை எதுவும் செய்யக்கூடாது. அதேபோல் கல்யாணம் செய்து வைக்காதீங்க. தாம்பத்தியம் கண்டிப்பாக கூடாது. அப்புறம் எதுவும் ஆயிடுச்சின்னா எங்களை சொல்லாதீங்க...”
-டாக்டர் இப்படி கூறியதுதான் பால்ராஜ்-ராஜகரி தம்பதியருக்கு தலையில் இடி விழுந்தது போல் இருந்தது.
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே அய்யனூரைச் சோந்த இந்த தம்பதியரின் மகன்தான் ரவிக்குமார். ஏழை விவாசாயியான பால்ராஜ் தன் மகனை எப்படியாவது நல்லமுறையில் படிக்க வைக்க ஆசைப்பட்டார். இந்த நிலையில்தான் அவனுக்கு பதினாறு வயது ஆகும்போது லேசாக இடுப்பில் வலி இருந்தது. நாள் ஆகஆக வலி அதிகரித்தது. இதனால் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று மகனை காட்டினார், தந்தை. அங்கு குணமாகாததால் மருத்துவர்கள் மாறிக்கொண்டே இருந்தனர். ஆனால் நோய்தான் குணமாகவில்லை. இறுதியில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்குதான் ஆபரேஷனைப் பற்றி எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.
ஆபரேஷன் செய்தாலும் உடல் பூரண நலம் காணாது என்பதால்... அதற்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. சித்தம் ஆயுர்வேதம் போன்று வேறு வைத்தியம் பார்க்கலாமா என்ற சிந்தனையில் இருந்தனர்...
ரவிக்குமாரும் தன் உடல் நலத்தை தானே உணர ஆரம்பித்தார். தந்தையின் ஆதரவில் எத்தனைக் காலம்தான் இருக்க முடியும்? ஆனால் மருத்துவத்தான் தன்னை முழுமையாக குணமாக்க இயலாது. அப்படியானால் ஆண்டவன்தான் இதற்கு வழிகாட்ட வேண்டும்.
இப்படி சிந்தித்துக் கொண்டிருக்கும்போது... தோரணமலைதான் அவரது கண்ணில் தென்பட்டது. மருத்துவத்தால் கைவிடப்பட்ட நோயை முருகப்பெருமான்தான் குணமாக்க வேண்டும் என்று நினைத்தேன். 2007&ம் ஆண்டு தைப்பூசத்திற்காக மாலை அணிந்து விரதம் இருந்தேன். 41 நாள் விரததத்திற்கு பின்னர் ஊரில் இருந்து நடந்தே தோரணமலை சென்று முருகப்பெருமானை வணங்கினேன். மூன்றாவது ஆண்டு சென்றபோது அலகு குத்திச் சென்றேன். என்ன ஆச்சரியம் அதன்பின் எனது இடுப்பு வலி பூரணமாக குணமாகிவிட்டது. ஆனாலும் தொடர்ந்து மாலைப்போட்டு விரதம் இருந்து மலைக்குச் சென்று வருகிறேன். உடல் நலத்தில் மட்டும் நான் வளர்ச்சி அடையவில்லை. பொருளாதாரத்திலும் வளர்ச்சி அடைந்ததேன். அதன்பின் எனக்கு திருமணமாகி குழந்தைகளும் பிறந்தனர்.
நாள் நிலங்கள் வாங்கி விவசாயம் செய்து வருகிறேன். எங்கள் ஊரில் புரோட்டாக் கடை நடத்தி வருகிறேன். மேலும் வில்லிசை கச்சேரியில் துணைப் பாடகராகவும் இருந்து வருகிறேன்.
என் வளர்ச்சியை கண்டு பலர் என்னுடம் மாலைப் போட்டு கோயிலுக்கு வர ஆரம்பித்தனர். தற்போது எங்கள் பகுதியில் இருந்து 40 பேர் மாலைப் போட்டு சென்று வருகிறோம். நாங்கள் பாதயாத்திரையாக செல்லும்போது முருகனின் ரதத்தை செய்து அதையும் இழுத்த படி கோயிலுக்கு செல்வோம்.
பஜனையின் போது முருகப்பெருமானைப்பற்றி நான் பாடுவேன். முதலில் நண்பர்கள் எழுதிக் கொடுத்தப் பாடலை பாடினேன். பின்னர் நானே சொந்தமாக பாட ஆரம்பித்தேன். எல்லாம் அவன் அருள்தான்..
இப்படி முருகப்பெருமானின் பெருமைகளை கூறிய ரவிக்குமாரின் மனைவி பெயர்
மனைவி பெயர் முருகேசுவரி. பாலகன், வேலவன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.