தேரையர் சமாதி
அகத்தியர்தான் முதன்முதலில் தோரணமலையின் சிறப்பை அறிந்தவர். அவர் அங்கு காசிவர்மன் என்ற மன்னனுக்கு கபால அறுவை சிகிச்சை செய்தபோது அவருக்கு உதவியாக பொன்னரங்கன் என்ற சிறுவன் இருந்தான். அறுவை சிகிச்சை செய்தபோது தலையில் மூளைக்குள் இருந்த தேரையை எப்படி எடுப்பது என்ற அகத்தியர் சிந்தித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பொன்னரங்ன் ஒரு சட்டியில் தண்ணீரை நிரப்பி அலம்பினான். தண்ணீர் சத்தம் கேட்டதும் தேரை மூளையி்ல் இருந்து குதித்து தண்ணீருக்குள் தாவியது.
பொன்னரங்கனின் சமயோசிதமாக செயல்பட்டதால் அவனுக்கு தேரையர் என்ற பெயர் சூட்டி தன்னுடன் சிஷியராக ஏற்றுக் கொண்டார். மேலும் தோரணமலையிலேயே தங்கி இருந்து சித்த ஆராய்ச்சி செய்யும் படி பணித்தார். நாளடைவில் அவர் இந்த மலையிலேயே சமாதி ஆனதாக கூறப்படுகிறது.
தற்போது ஆரூடம் மூலம் கணித்ததில் தேரையர் சமாதியான இடம் அறியப்பட்டு உள்ளது. அதாவது மலை ஏறும்போது, முருகன் சன்னதிக்கு சற்று கீழே இடது புறம் ஒரு குகை இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அந்த இடத்தில்தான் அவர் சமாதியாகி இருக்க வேண்டும் என்று அறியப்பட்டு உள்ளது. அந்த இடத்திற்கு எளிதல் செல்ல முடியாத அளவுக்கு முட்புதர் அடர்ந்து காணப்படுகிறது. அதை சீர்திருத்தி அந்த இடத்தில் ஒரு சன்னதிபோல் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சித்தர் பீடம் உள்ள இடத்தில் தியானம் செய்தால் நிறைந்த அருள் கிடைக்கும். எனவே அங்கு தியானக் கூடம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது