தைப்பூசம்
தோரணமலையில் கொண்டாடப்படும்
திருவிழாக்களி்ல் முக்கியமானது தைகப்பூசம். இந்த
தைப்பூசம் நாள் அன்றுதான் முருகப்பெருமானுக்கு
சூரனை வெல்ல அன்னை சக்தி வேல் வழங்கியதாக
புராணம் கூறுகிறது. மேலும் இந்த தைப்பூசம் அன்றுதான் பல தெய்வங்களுக்கு திருக்கல்யாணம் நடந்ததாக ஐதீகம். அந்த வகையில் தைபூசத்தன்று தோரணமலையில் முருகன் திருக்கல்யாணம் நடைபெறும். அன்று அதிகாலையில் கிருஷ்ண அய்யர் தலைமையில் கணபதி ஹோமம் நடைபெறும்.
பக்தர்கள் மலையில் இருந்து எடுத்துவரும் சுனை நீரால் அபிஷேனம் செய்யப்படும். அதோடு பால், பழம், திரவிய பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். பின்னர் பெண்கள் சீர் வரிசை தட்டுக்கள் எடுத்துவர திருக்கல்யாணம் நடைபெறும். இங்கு நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சிகள் மனதை கவர்ந்து மகிழ்விக்கும் வகையில் இருக்கும்.
மேலும் அன்றைய தினம் இந்த சுற்றுவட்டார மாணவர்ளை ஊக்கும்வகையில் கேடயமும் பணமுடிப்பும் வழங்கப்படுகிறது. ஊட்டி படுகர் இன மக்களின் கலைநிகழ்ச்சியும், வள்ளியம்மாள் புரம் திருமுருகன் பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். பக்தி சொற்பொழிவும் நடைபெறும். அன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு காலை முதல் மாலை வரை அன்னதானம் நடைபெறும்.