கடைசி வெள்ளி
இந்தக் கோவிலில் தமிழ்மாத கடைசி வெள்ளி
அன்று பக்தர்கள் அதிகமாக வருவர். அந்தகாலத்தில்
கடைசி வெள்ளி அன்றுவரும் பக்தர்கள் இங்குள்ள
சுனை நீரை கூஜாக்களி்ல் எடுத்துச் செல்வர்.
தப்போதும் கடைசி வெள்ளி அன்று பக்தர்கள்
திரண்டு வருகிறார்கள். மலை உச்சியில் உள்ள
சுனையில் இருந்து பக்தர்கள் குடங்களில் தீர்த்தம்
எடுத்து வருகிறார்கள். அந்த தண்ணீர் மூலம்
உற்சவர் முருகன், வள்ளி-தெய்வானைக்கு
அபிஷேகம் செய்யப்படுகிறது. சிறப்பு அலங்காரம்
செய்து சிறப்பு பூஜை நடத்துகிறார்கள். மேலும் விவசாயம் தழைக்கவும் விவசாயிகள் செழிக்கவும் ஸ்ரீவர்ண கலச பூஜை நடத்தப்படுகிறது.
அன்று காலையிலும் மதியமும் அன்னதானம்
நடக்கிறது.